பெருந்தோட்ட உத்தியோகத்தர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

                                                                                                                    தலவாக்கலை பி.கேதீஸ்

தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட உத்தியோகத்தர்களுக்கிடையிலான அணிக்கு ஏழு பேர் கொண்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு கிறேட்வெஸ்டன் மற்றும் லோகி அணி தெரிவாகின. இதில் கிறேட்வெஸ்டன் தோட்ட உத்தியோகத்தர் அணி வெற்றி பெற்றது.  

ரதெல்ல டிஏசிசி விளையாட்டு மைதானத்தில் கிறேட்வெஸ்டன் தோட்ட முகாமையாளர் சரத் ரணவீர மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட தோட்ட முகாமையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் கிறேட்வெஸ்டன் அணி வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லோகி அணியினர் 4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 63 ஓட்டங்களை குவித்தனர். லோகி அணி சார்பாக சிவராஜ் 14 ஓட்டங்களையும் கனராஜ் 20 ஓட்டங்களையும் பெற்றனர். 64 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிறேட்வெஸ்டன் அணியினர் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றனர். 

இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்டக்காரராக கிறேட்வெஸ்டன்; அணியின் 41 ஓட்டங்களை பெற்ற ஜெகநாத் தெரிவு செய்யப்பட்டார். கிறேட்வெஸ்டன் தோட்ட முகாமையாளர் சரத் ரணவீர மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட தோட்ட முகாமையாளர்கள் அதிதிகளாக கலந்துக்கொண்டு பரிசில்களை வழங்கினர்.


No comments: