வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் முன்வைத்துள்ள கோரிக்கை

வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் சகல வாக்காளர்களதும் சுகாதார பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் வாக்காளர்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தாம் கோருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

வாக்களிக்கும் நிலையங்களுக்கு வரும் அனைத்து வாக்காளர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.கைகளைக் கழுவி விட்டு வருவதும் கட்டாயமானது.வாக்கைச் செலுத்திவிட்டு வெளியேறும் போது கைகழுவுவது அவசியமாகும்.

மேலும் ஒவ்வொரு வாக்காளருக்கும் தொற்று நீக்கப்பட்ட பேனா அல்லது பென்சில் வழங்கப்படும்.இந்த ஏற்பாடுகள் காரணமாக வாக்காளர்களுக்கு கிருமி தொற்றக்கூடிய சாத்தியம் இல்லையென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.



No comments: