மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் சட்டங்களை நீக்குவதே ஜனாதிபதியின் எதிர்பார்பாகும்

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பொது மக்களுக்கு வசதியானது சட்டமே அன்றி அது சிரமங்களை அளிக்கக்கூடியதாக இருக்க கூடாது என்று பஸ் போக்குவரத்து சேவை மற்றும் ரயில் பெட்டி மற்றும் மோட்டார் வாகன தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் பொது மக்களுக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் வீதிகளில் பயணிக்க முடியாத அளவிற்கு புகை வாகனங்களில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தில் ஏதோவொரு இடத்தில் தவறு இருப்பதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் சட்டங்களை நீக்குவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: