ஹட்டன் விஜிராபுரா பகுதியில் குடியிருப்பு ஒன்றில் தீ பரவல்

 பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் விஜிராபுற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை குறித்த வீட்டில் தீ பரவியதாகவும் வீட்டில் இருந்த உடமைகள் எறிந்து நாசமாகியுள்ளதாகவும் எவருக்கும் எவ்வித காயங்களோ உயிர் சேதங்களோ ஏற்படவில்லையெனவும் தெரிிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மின்சார கோளாறு காரணமாகவே இந்த தீபரவல் ஏற்பட்டுள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

பொலிஸார் பொதுமக்கள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: