இது வரையிலும் மூடப்படாத மாணிக்க கல் சுரங்கக் குழிகள்-சிரமப்படும் கால்நடை வளர்ப்பாளர்கள்

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க

ஆபரணங்கள் அதிகாரசபையினால் பொகவந்தலாவ சீனாகலை பகுதியில் மாணிக்ககல் அகழ்வினை மேற்கொள்ள இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அனுமதிவழங்கப்பட்டு இருந்தது.  

பொகவந்தலாவ சீனாகலை தோட்டத்தில் கால்நடைகளுக்கு
புல் அறுக்கும் காணியினையே மாணிக்ககல் அகழ்வினை மேற்கொள்ள கடந்த 2015ம்
ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஒப்பந்தம்
நிறைவடைந்து சுமார் மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையிலும்
குறித்த பகுதியில் தோண்டப்பட்ட மாணிக்ககல் சுரங்கக்குழிகளை மூடுவதற்கான
நடவடிக்கையினை தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபை
நடவடிக்கை எடுக்கபடவில்லையெனவும்  கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றம்
சுமத்துகின்றனர்.

குறித்த பகுதியில் மாத்திரம் 48 மாணிக்கக் கல் சுரங்கக்குழிகள்
தோண்டப்பட்டிருப்பதாகவும், கானப்படுகின்ற சுரங்ககுழிகளில் நீர் நிரம்பி
மாசடைந்த நிலையில் காணப்படுவதோடும் மழைபெய்யும் காலங்களில் விவாசாய
பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்படுகிறது.

இதேவேளை  இந்த சுரங்கக் குழிகள் மூடப்படாமையினால்  கால் நடை வளர்ப்பாளர்கள் பின்னவலை மாரத்தென்ன போன்ற பகுதிகளுக்கு சென்று கால் நடைகளுக்கு வாகனங்களின் ஊடாக புல் சேகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்வதோடு சீனாகலை பகுதியில் காணப்படுகின்ற சுரங்கக்
குழிகளை மண் இட்டு மூடப்பட்டால் கால்நடைகளுக்கு புல் அறுக்க பெரிதும்
சிரமத்தை எதிர்நோக்க தேவையில்லையென கால்நடை வளர்ப்பாளர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர். 

பொகவந்தலாவ சீனாகலை தோட்டபகுதியில் காணப்படுகின்ற

மாணிக்ககல் சுரங்கக் குழிகளை மண் இட்டு மூடும் நடவடிக்கையினை இந்த புதிய
அரசாங்கத்தில் இருக்கின்ற நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்
நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டுமென கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments: