ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தகுதி பெற்றோருக்கான கடிதங்களை அனுப்பும் நடவடிக்கை முன்னெடுப்பு

ஒரு இலட்சத்து 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தகுதிப் பெற்றோருக்கான கடிதங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த குறித்த வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த திட்டத்திற்கு அமைய 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் ஒரு இலட்சம் பேர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தேர்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பணியில் அமர்த்தப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் பட்டியல் நேற்று நள்ளிரவு அரச சேவை,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விபரங்களை  www.pubad.gov.lk எனும் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும்.

அத்துடன் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் இன்று முதல் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும்,தகுதி இருந்தும் தெரிவு செய்யப்படாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: