உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால்இதுவரை 1 கோடியே 80 இலட்சத்து 11 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் 688,683 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு கொரோனா தொற்று மற்றும் இறப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுப்பட்டு வருவதாகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது..
No comments: