அரசாங்கத்தின் முக்கிய அச்சுப் பணிகள் அனைத்தும் அரசாங்க அச்சு திணைக்களம் முன்னெடுப்பு


கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து அரசாங்க அச்சு நடவடிக்கைகளும் அரச அச்சக திணைக்களத்தின் மூலம் மேற்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை வகுக்குமாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு அமைவாக ஆரம்ப நடவடிக்கை என்ற ரீதியில் கடவுச்சீட்டு அச்சிடுவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

அரச அச்சக திணைக்களத்தின் செயற்பாடுகளின் மதிப்பீடு தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது முத்திரை, வாக்காளர் அட்டை விசாவிற்கான ஸ்ரிக்கர் மற்றும் வர்த்தமானி அறிவிப்பு ஆகியன அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிடப்படுகின்றன.

அமைச்சு, அரச நிறுவனங்கள் திணைக்களங்கள் போன்றவற்றின் அச்சு நடவடிக்கைகளில் 50 சதவீதம் அல்லது முடிந்தளவு பாதுகாப்பான அச்சு நடவடிக்கைகளை அசராங்க அச்சக திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: