இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கத் தீர்மானம்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அபாயநிலை தொடர்ந்தும் நீடிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலனறுவை லங்காபுர பகுதியில் 300 பேர் உள்ளடங்கலாக ஹிங்குராகொட பகுதியில் உள்ள 58 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு  உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: