டிக்கோயா நகர வர்த்தக நிலையமொன்றில் கொள்ளை - சீ.சீ.டிவி. உதவியோடு சந்தேகநபர் கைது
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா நகரபகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் 30ஆயிரம் ரூபா பணமும் ஒரு தொகை சிகரட் மற்றும் ஒருதொகை பணம் மீள்நிரப்பும் அட்டைகள் என்பவற்றை கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபரை சீ. சீ. டிவி. கேமராவின் உதவியோடு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் 25.08.2020 மாலை வேளையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்று காலை வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை திறந்து வைத்து விட்டு வீட்டின் சமையலறை பக்க சென்ற வேளை வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த சந்தேக நபர் பணம் மீள்நிரப்பும் அட்டைகள். சிகரட்கள் என்பன களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதோடு வர்த்த நிலையத்திற்கு அருகாமையில் பொருத்தபட்டிருந்த சீ.சீ டிவி கேமராவில் கொள்ளையிடும் காட்சி என்பன பதிவாகியிருந்ததனால் சீ.சீ.டிவி கேமராவின் உதவியோடு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 30ஆயிரம் ருபா பணம் மற்றும் ஒரு தொகை மீள்நிரப்பும் அட்டைகள் ஒரு தொகை சிகரட் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சாமிமலை மானிலு தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றையதினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: