தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் கையளித்த மனு

பட்டதாரிகளுக்கான அரச நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1450க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒனறிணைந்து கலந்துரையாடியதோடு வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே அரசாங்கத்தினால் நியமனக் கடிதங்கள் அனுப்பி எதிர்வரும் மாதம் 2ம் திகதி தமது கடமைகளை ஆரம்பிக்கின்ற நிலையில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் அந்த திகதிக்குள் உரிய தீர்வு பெற்றுத் தர வேண்டும் என பட்டதாரிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: