நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று பற்றிய விபரம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  2971 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2819 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 140 ஆக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் நபர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: