நான்கு கட்டங்களாக அமுலாக்கப்படவுள்ள மின் விநியோகத் தடை
நாடளாவிய ரீதியில் நான்கு கட்டங்களாக மின்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் அடிப்படையில், நாடளாவிய ரீதியில் A, B, C மற்றும் D என 4 குழுக்களாக பிரதேசங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
வார நாட்களில், A குழுவுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில், பகல் வேளைகளில், காலை 10 மணிமுதல் 11.45 வரையும், இரவு வேளைகளில் 6 மணி முதல் 7 மணி வரையும் மின்விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது.
வார நாட்களில், B குழுவுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில், பகல் வேளைகளில், காலை 11.45 முதல் பிற்பகல் 1.30 வரையும், இரவு வேளைகளில் 7 மணி முதல் 8 மணி வரையும் மின்விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது.
வார நாட்களில், C குழுவுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில், பகல் வேளைகளில், பிற்பகல் 1.30 முதல் 3.15 வரையும், இரவு வேளைகளில் 8 மணி முதல் 9 மணி வரையும் மின்விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது.
வார நாட்களில், D குழுவுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில், பகல் வேளைகளில், பிற்பகல் 3.15 முதல் 5 மணி வரையும், இரவு வேளைகளில் 9 மணி முதல் 10 மணி வரையும் மின்விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது.
இதேவேளை, வார இறுதி நாட்களில், மாலை 6 மணி முதல் 7 மணி வரை, A குழுவுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை, B குழுவுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களிலும், மின்விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன், இரவு 8 மணி முதல் 9 மணி வரை C குழுவுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களிலும், மற்றும் இரவு 9 மணி முதல் 10 மணி D வரை குழுவுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களிலும், இவ்வாறு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு இவ்வாறு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, தமது பிரதேசங்களில் ஏற்படும் மின்விநியோகத் தடை குறித்த முழுமையான விபரங்களை மாகாண மின்சார சபை அலுவலகங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
துரித அழைப்பு இலக்கம் – 1987
கொழும்பு நகரம் – 011 4498498
வட மேல் மாகாணம் – 037 2024444
வட மத்திய மாகாணம் – 025 2024444
வட மாகாணம் – 021 2024444
மேல் மாகாணம் – வடக்கு – 011 5988988
மத்திய மாகாணம் – 081 2574444
கிழக்கு மாகாணம் – 026 2054444
மேல் மாகாணம் – தெற்கு (பிரிவு 2) – 011 2146464
சப்ரகமுவ மாகாணம் – 045 2285285
ஊவா மாகாணம் – 055 2232222
மேல் மாகாணம் – தெற்கு (பிரிவு 1) – 011 4418418
தென் மாகாணம் – 091 2278278
ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலம் பொதுமக்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
No comments: