சகல பல்கலைக்கழகங்களும் நாளை முதல் மீள ஆரம்பம்

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் நாளை முதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடுவதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பரீட்சைகள் நிமித்தம் பல்கலைக்கழகங்கள் கட்டம் கட்டமாக திறப்பதற்கு அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் நாளை முதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு சுகாதார முறைமைகளை பின்பற்றி குறித்த கல்வி நடவடிக்கைகள் மீள முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழகங்களில் உள்ள விடுதிகளின் ஒரு அறையில் ஒரு குழுவினரை மாத்திரம் சேர்ப்பதற்கு பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பதிவு செய்யப்படாத மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்லுவதற்குத் தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: