சிறிய ரக பாரவூர்தி ஒன்று புகையிரதத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர்பலி

மட்டகளப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் சிறிய ரக பாரவூர்தி ஒன்று புகையிரதத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக கல்குடா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா நோக்கிப் பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கல்குடா புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பு கடவையை உடைத்துக் கொண்டு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதி பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: