மலைமகள் தமிழ் வித்தியாலய மாணவனை தாக்கிய அதிபரை இடமாற்ற கோரி பெற்றோர்கள் ஆர்பாட்டம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட ஹட்டன் வெளிஒயா மலைமகள் தமிழ்

வித்தியாலயத்தில் தரம் 11 ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை  சப்பாத்து
காலால் எத்தி தலை பகுதியினை சுவரில் தாக்கிய குற்றச்சாற்றுக்கு எதிராக
பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் குவிந்து 25.08.2020.செவ்வாய்கிழமை இன்று
ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த வியாழக்கிழமை ஜெயபிரகாஸ் என்ற மாணவன்  தாக்கப்பட்டு வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாணவன் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றபட்டு நேற்றைய தினம் குறித்த சிறுவன் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டுக்கமைய ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்ட அதிபர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் முன்னிலைபடுத்தப்பட்ட போது ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் 
விடுவிக்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த மாணவனுக்கு ஏற்பட்ட நிலை இனி எந்த ஒரு மாணவனுக்கும் நடக்க கூடாது என
வலியுறுத்தியும் மலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் சிவபிரகாசம்
பாடசாலைக்கு வரகூடாது என வலியுறுத்தியும் பாடசாலை கல்வியில் வளர்ச்சி
இல்லாத அதிபர் எமக்கு வேண்டாம, பெற்றோர்களையும்  மாணவர்களையும்
மதிக்க தெரியாத அதிபர் வேண்டாம்,கல்வி அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்கபட
வேண்டும்.

நிர்வாக திறமை இல்லாத அதிபர் எமக்கு வேண்டாம் மாணவனை தாக்கிய
அதிபருக்கு எதிராக கல்வி அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போன்ற பதாதைகளை ஏந்தி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை பாடசாலை எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லையெனவும் குறித்த பாடசாலையில் 350மாணவர்கள் கல்வி கற்றுவருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும்
சுட்டிக்காட்டினர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகைத்  தந்த வட்டவளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி
மஞ்சு வீராஜ் வித்தானகே பாடசாலை நிர்வாகத்தோடும் பெற்றோர்களோடும் கலந்துரையாட, குறித்த அதிபர் வேண்டாமென கூறினால் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலமாக வழங்குமாறு மக்களிடம் தெளிவுபடுத்திய பிறகு மக்கள் ஆர்பாட்டத்தினை கைவிட்டு கலைந்து சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலையக் கல்வி பணிமனையின் பணிப்பாளரை
தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.
No comments: