கொரியாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

தொழில் ஒப்பந்தம் காலாவதியாகிய நிலையில் கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை இரண்டு மாதங்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசேட விமான சேவையைப் முன்னெடுத்து 1600 இலங்கையர்கள் கொரியாவிலிருந்து அழைத்துவரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் வரை நாட்டிலிருந்து கொரியாவிற்கு செல்ல எதிர்பார்த்துள்ளவர்களை அனுப்பாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியாவின் மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி கிம் வோன் சோக்குடன் (Kim Won Seok) தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவற்றை தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.



No comments: