பிரதமருடன் கலந்துரையாடல்

 தலவாக்கலை பி.கேதீஸ்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கீழ் இயங்கும் அமைச்சுக்கள், மற்றும் திணைகளங்களின் கடந்த காலங்களில் மேற்கொள்ளபட்ட  செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடலொன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள வீடமைப்பு மற்றும் நிர்மாணுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் 28.8.2020 நடைப்பெற்றது. 

இதன்போது வீடமைப்பு  மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் மலையகத்தில் அமைக்கவிருக்கும் வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் இவ்வீட்டுத்திட்டங்கள் நிர்மாணிக்கும் போது வீட்டின் கூரைக்கு பதிலாக சீமெந்து கொண்டு கொங்ரீட் சிலப் முறையிலான கூரைகள் அமைப்பது தொடர்பாகவும் வீட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய முறையில் வீட்டுத்திட்டத்தை மேற்கொள்ளவும்,தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இந்நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்  மற்றும் அமைச்சின் செயலாளர் குமாரசிரி, அமைச்சின் அதிகாரிகள், திணைகளங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

No comments: