பாராளுமன்ற அமர்வுகளில் பின்பற்றப்படவுள்ள சுகாதார வழிமுறைகள் அடங்கிய அறிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்ற அமர்வுகளில் பின்பற்றப்படவுள்ள சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  அனில் ஜாசிங்கவினால், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்கும் போது  முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டதோடு, தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் 1 மீற்றர் சமூக இடைவெளிக்கு அமைவாக அமர வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கையடக்கத் தொலைபேசி மற்றும் பேனை போன்ற தனிப்பட்ட கருவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளாதிருப்பதுடன்  தொடுகை மூலம் வாழ்த்தும் முறைகளைப் பின்பற்றாதிருத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: