நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லொறிகளில் மோதி விபத்துக்குள்ளான பாரவூர்தி

                                                                                                              பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 

தலவாகலையில் இருந்து பெலவத்த பகுதிக்கு பால் ஏற்றிசென்ற பாரவூர்தி நிறுத்தி வைக்கபட்டிருந்த இரண்டு லொறிகளில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. 

நானுஒயா  பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான குறுக்கு வீதியின் ரதாலை சமரசெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லொறியின் மீது பால் ஏற்றிசென்ற பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் 13.08.2020வியாழகிழமை இரவு வேளையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தலவாக்கலை பகுதியை நோக்கி மணல் ஏற்றி சென்ற லொறியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சமரசெட் பகுதியின் வீதி ஓரமாக மணல் ஏற்றி வந்த லொறி நிறுத்திவைக்கபட்டிருந்ததாகவும் நிறுத்தி வைக்கப்பட்ட லொறியின் பாதுகாப்பிற்காக மற்றுமொரு லொறி மணல் ஏற்றி வந்த லொறிக்கு பின்னால் நிறுத்தி வைக்கப்பட்ட வேளையில் தலவாக்கலையில் இருந்து பெலவத்த பகுதிக்கு பால் ஏற்றிசென்ற பாரவூர்தி நிறுத்தி வைக்கப்ட்ட லொறிகள் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானது.

நிறுத்திவைக்கப்பட்ட லொறிகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பால் ஏற்றி சென்ற பாரவூர்தியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினாலே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும்  நானுஒயா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: