இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள்- நான்கு பேர் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மன்னார் வங்காலை மற்றும் நுரைச்சோலை தலுவ கடற்கரைகளின் ஊடாக சட்டவிரோதமாக குறித்த உலர்ந்த மஞ்சள் தொகையை நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட போது கடற்படையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 807 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் தொகை, இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சின்னபாடு மற்றும் யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: