ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


நாவலபிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி நகரப் பகுதியில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு சந்தேக நபர்களை நாவலபிட்டி குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது 18.08.2020.செவ்வாய்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நாவலப்பிட்டி குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு தொகை கஞ்சாவும் 34500ருபா பணமும் மீட்கபட்டுள்ளதாக நாவலப்பிட்டி குற்றத்தடுப்பு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேக நபர்களை இன்றயதினம் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: