தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் நாளை நள்ளிரவுடன் 12 மணிக்குப் பின்னர் பிரசார கூட்டங்களை நடாத்துதல், கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடாத்துதல்,வீடு வீடாகச் சென்று வாக்குகளைக் கேட்டல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை நள்ளிரவின் பின்னர் ஆரம்பமாகும் காலப்பகுதியினுள் அனைத்து கட்சிகள்,குழுக்கள், வேட்பாளர்கள் இவற்றைத் தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


No comments: