வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்


அரசாங்கத்தினால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் போதியளவு இடப்பற்றாக்குறை காரணமாக,வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்திட்டம் கால வரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 30ம் திகதி இஸ்ரேலில இருந்து ஒரு குழுவினரை நாட்டிற்கு அழைத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தப்போதிலும், இந்நிலையில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையினை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: