மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்சாட்டில் பலர் கைது


மேல் மாகாண காவற்துறையினரால் கடந்த 24 மணித்தியாலத்தில்  மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 1141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காவற்துறையினரின் பிடியில் இருந்து தப்பியிருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 477 பேர் உள்ளடங்குவதோடு,பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் 98 பேரும்,ஊழல் மோசடி குற்றச்சாட்டின் கீழ் 465 பேர் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் 101 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறைமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: