தேர்தல் பிரசார பணிகள் நிறைவு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் நேற்று  நள்ளிரவுடன் நிறைவடைந்தன.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் 5ம் திகதி வரை அமைதிகாலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்ளை நடத்துதல்,வீடு வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரித்தல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல்,விளம்பர பலகைகளைக் காண்பித்தல், சுவரொட்டிகளைக் காண்பித்தல்,தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்தல் போன்ற செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அறிவித்தலை மீறும் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள், வேட்பாளர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேரத்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.No comments: