நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்சார துண்டிப்பினால் ஏற்பட்டுள்ள நட்டம்

நாடாளாவிய ரீதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்சார துண்டிப்பினால் சுமார் 230 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டிய மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் சுமார் எட்டு மணித்தியாலத்திற்கும் மேலாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு சுமார் ஆயிரத்து 200 மெகாவோட்ஸ் மின்சாரம் தடைப்பப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

இதேவேளை, பழுதடைந்துள்ள இயந்திரங்களை சீர் செய்வதற்கு சுமார் தொள்ளாயிரம் மில்லின் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக மின்சார சபையின் ஊடகப் பணிப்பாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் அதன் தாக்கம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மூன்று இயந்திரங்கள் செயழிலந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு அவற்றை சீர் செய்வதற்கு தொள்ளாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்ற நிலையில், அதற்கான நிதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  அரசாங்கம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார சபையின் ஊடகப் பணிப்பாளர் சுலக்‌ஷன ஜயவர்தன வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: