நுவரெலியா மலையகத்தின் இதயம் அந்த இதயத்தை துளையிட வந்தவரே முத்தையா பிரபாகரன்-வேலு யோகராஜ் அதிரடி

நுவரெலியா என்பது மலையக மக்களின் மாசற்ற இதயம் அந்த இதயத்தை மாசுப்படுத்தி துளையிட்டு நுவரெலியா மக்களையே அதளபாதாளத்தில் தள்ள வந்தவரே முத்தையா பிரபாகரன் அவரை மக்கள் திரும்பி கண்டிக்கே அனுப்ப வேண்டுமென நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் மலையகத்தை மதுவில்லா பகுதியாக மாற்றுவேன்.வியாபார ஸ்தலமாக மாற்றவேன் என பீலா விட்டுக்கொண்டு உல்லாச விடுதிகளில் நுவரெலியா நகர மக்களுக்கு மது உபசாரத்தை வழங்குகின்றார்.

எதனோல் வியாபாரிகளை உள் நுழைய விட்டால் நுவரெலியா மட்டுமல்ல முழு மலையகமுமே சுடுகாடாகி விடும்.எனவே இம்முறை மக்கள் சிந்தித்து வாக்களிக்க  வேண்டும்.இவ்வாறு  அற்ப சொற்ப ஆசைகளை துாண்டுவோருக்கு மக்கள் பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என வேலு யோகராஜ் குறிப்பிட்டார்.


No comments: