தம்பிலுவில் முனையூர் ஸ்ரீ படபத்திர காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்


எழில் மிகு அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவட்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் பதியில் வீற்றிருந்து தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் முயையூர்  ஸ்ரீ படபத்திர காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு இன்று கதவு திறத்தலுடனும் திருக்கொடியேற்றத்துடனும் மிக விமர்சையா ஆரம்பிக்கப்பட்டது.

கொரோனா அச்சம் காரணமான ஆலையத்தல் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலேசனைக்கமைவாக சுகாதார பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்  ஆலய நிர்வாகத்தினரின் வேண்டு கோளுக்கு இணைங்க திருக்கோவில் பிரதேச பொலிசாரினால் வழங்கப்பட்டிருப்பதாக ஆலய செயலாளர் முனையூர் செல்வம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் அம்மன் உற்சவம் எதிர்வரும் 07 நாட்களுக்கு நடைபெற இருப்பதுடன் எதிர்ரும் புதன் கிழமை2020.08.26  இடம் பெறும் தீமிதிப்பு வைபத்துடன் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவு பெறும்.


No comments: