பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகளை நடாத்த அனுமதி

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் தடைப்பட்டிருந்த பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க விளையாட்டு மற்றும் சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

மேலும் சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கமைய பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க இரண்டு அமைச்சுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: