கொரோனா அனர்த்தத்தின் பின்னர் இடம்பெற்ற கல்முனை பொலிஸ் நிலைய மாதாந்த அணிவகுப்பு பரிசோதனை

குமணன் சந்திரன்

கல்முனை  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2020 ஆண்டிற்கான  மாதாந்த   அணிவகுப்பு  மரியாதையும் பரிசோதனையும்  கொரேனா அனர்த்தத்தின் பின்னர்  இடம்பெற்ற பொலிஸ் நிலைய வளாகத்தில்    இடம்பெற்றது.

கல்முனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  கே.எச் சுஜீத் பிரியந்த  தலைமையில்  சனிக்கிழமை(29)  காலை    நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையில் கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜயசுந்தர   கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடைகள்  ,வாகனங்கள் ,  என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையத்திலுள்ள வாகானங்களின் நிலையையும் பரிசோதனை மேற்கொண்டார்.No comments: