இன்றைய தினமும் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பிலான விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது


இவ்வருடம் டிசெம்பர் மாதம் வரையிலான காலப் பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கை நேற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்போது 1300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இன்றை தினமும் இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் ஒன்று கூடவுள்ளதுடன் இதன்போது விவதாம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: