கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி முதல் தரம் 6  தொடக்கம் தரம் 13 வரையிலான அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 வரையில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா குறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி முதல் ஆரம்ப பிரிவுகளுக்கான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: