துறைமுக ஊழியர்களின் பணிப் போராட்டம் நிறைவுக்கு வந்தது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கால்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து கொழும்பு கிழக்கு முனைய செயற்பாடுகளை வெளிநாட்டிற்கு ஒப்படைக்கக் கூடாது என்று கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்படுதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் பிரச்சினை தொடர்பாக 23 தொழிற்சங்கங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையினை ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: