இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்கள்

 ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையில் அமைந்துள்ள புதிய அமைச்சரவையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய அமைச்சரவையின் முதவாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 19ம் திகதி பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு ஜனாதிபதி தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுளள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்களும் 39 இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: