மின் விநியோகத் தடை நேர அட்டவணை


நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஒரு மணிநேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் நான்கு கட்டங்களாக இந்த மின் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் அடிப்படையில் மாலை 6.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை சில பகுதிகளிலும், இரவு 7.00 மணிமுதல் 8.00 மணிவரை சில பகுதிகளிலும், இரவு 8.00 மணிமுதல் 9.00 மணிவரை சில பகுதிகளிலும்,இரவு 9.00 மணிமுதல் 10.00 மணிவரை சில பகுதிகளிலும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய மின்சார கட்டமைப்பின் மின் பிறப்பாக்கியை வழமைக்கு திருப்பும் செயற்பாடு நிறைவடையும் வகையில் எதிர்வரும் 4 நாட்களுக்கு இந்த மின்சார விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: