கொத்மலையில் அறுந்து விழுந்தது மின்சார கம்பிகள் உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்


நீலமேகம் பிரசாந்த்

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடக்கும்புர நடுப்பிரிவில் ஆடிக்காற்றால் மின்சாரகம்பிகள் அறுந்து வீட்டு கூரைகளில் விழுந்துள்ளது.8 வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பிலேயே இவ்வாறு அறுந்து விழுந்துள்ளது.

03/08/2020 திங்கட்கிழமை காலை வீசிய பலத்தக்காற்றினால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதிஸ்டசத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குறித்த லயத்தின் வாசிகள் உயிர்த்தப்பியுள்ளதோடு குறித்த விடயத்தை கொத்மலை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: