“தேயிலை சாயம்" புகைப்பட கண்காட்சி

 (க.கிஷாந்தன்)

மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி நேற்று 23 ஆம் திகதி தலவாக்கலை ஶ்ரீ கதிரேசன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

 

தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடமுடியும் என நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அறிவித்திருந்தது.

 

மலையகத் தமிழர்களின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வலி சுமந்த வாழ்க்கையை எடுத்தியம்பும் காட்சிகளும் உள்ளன.

 

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் என பல முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் நேற்று காலை கண்காட்சியை பார்வையிட்டனர்.No comments: