இன்றைய தினம் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்கள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலர் இன்றைய தினமும் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றவுள்ளார்.

அத்தோடு அமைச்சர் சமல் ராஜபக்ஷ,தினேஸ் குணவர்தன,விமல் வீரவங்ச,உதய கம்மன்பில ஆகிய அமைச்சர்களும்,தயாசிறி ஜயசேகர,சிறிசேகர கம்லத் மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகிய இராஜாங்க அமைச்சர்களும் இன்றைய தினம் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதோடு,பல அமைச்சுகளுக்கான செயலாளர்களும் இன்றைய தினம் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: