இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ள செய்தி

கொரோனா தொற்றுக் காரணமாக பல நாடுகளில் தொழில் செய்யும் இலங்கையர்களில் சுமார் 10,000 பேர் தமது தொழிலை இழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளதாக பணியகத்தின் பேச்சாளர் மங்கல ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ளவர்கள் நாடு திரும்ப விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு சகல விதமான உதவிகளையும் வழங்க பணியகம் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை துாதுவ அதிகாரிகள் அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு மாற்று வேலைகளை தற்காலிகமாக வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு நாடுகளில் தற்போது உள்ள சுமார் 15 ஆயிரம் இலங்கையர்களின்  நலன் கருதி வேலைவாய்ப்பு பணியகம் கவனம் செலுத்தி வருவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

No comments: