நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 பேர் நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 34 பேரும் கட்டாரில்இருந்து 22 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும், ஓமானில் இருந்து 150 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 288 பேரும் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: