நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும்,கென்யா மற்றும் டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்தடைந்த இருவருக்கும்,மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2953 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2805 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 136 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: