தேர்தல் கால சலுகைகளை மக்கள் தவிர்ப்பதே சிறந்தது -வினோகாந்த்


வினோகாந்த் ஊடகப்பிரிவு

தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் சுயநலத்திற்காக வாக்கு கேட்கும் ஒரு சில கட்சிகள் மக்களின் பெறுமதி மிக்க வாக்குகளை பெறுவதற்காக பணமாகவோ பொருளாகவே தேர்தல்கால சட்டவிரோத சலுகைகளை வழங்க முன்வருவர் இதற்கு அடிபணியாமல் மக்கள் தங்களது வாக்குரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெ.வினோகாந்த் தெரிவித்தார்.

நேற்று தாண்டியடி பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் பரப்புரையின் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்.

கடந்த காலங்களில் மக்களுடன் மக்களாக இருந்து மக்களுக்காக வேவையை நன்கு அறிந்த தலைவன் ஒருவன் உருவாகி மக்களுக்கான சேவையை தொடர்ந்தும் செய்ய எத்தணிக்கும் வேளையில் இவ்வாறான நிரந்தரமற்ற சலுகைகளை வழங்கி மக்களை திசை திருப்புவது ஏற்றுக் கொள்ளக் கூடிய செயற்பாடல்ல.மக்கள் ஒரு விடையத்தினை தெழிவாக புரிந்து கொள்ள வேண்டும் இவ்வாறான சலுகைகளை பெறாமல் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த மக்கள் ஒத்துளைப்பு வழங்க வேண்டும்.

சஜித் பிறேமதாச இத் தேர்தலில் மக்கள் ஆணையுடன் வெற்றி பெறுவது உறுதியான விடயமாகிவிட்டது.

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் வட-கிழக்கு மக்களின் தெரிவு சஜித் பிறேதாசவாகவே காணப்பட்டார். இம்முறை மூவின மக்களின் ஆதரவுடன் சஜித்  பிரதமராவது உறுதியான விடையமாகிவிட்டது.

மண்டானை பிரசேத்தில் இடம் பெற்ற பிரச்சாரத்தின்போது

மண்டானை பிரசேத்தில் இடம் பெற்ற பிரச்சாரத்தின்போது
எமது மாவட்டத்தில் முக்கிய தேவையாக காணப்படுவது நீர் பற்றாக்குறை இதனை தீர்த்து வைப்பதாக சஜித் வாக்குறுதியளித்துள்ளார்.
தம்பட்டடை ஆடைத் தொழிற்சாலை மீள ஆரம்பிக்கும் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீட்டுத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வீடமைப்பு திட்டங்கள் அனைத்தும் முடிவுறும்.

எனவே மக்கள் பெய் பிரச்சாரங்களுக்கும் நிரந்தரமற்ற சலுகைகளுக்கும் அடிபணியாமல் எதிர்காலத்தினை சிந்தித்து வாக்களிக்குமாறு குறிப்பிட்டார்

No comments: