வாக்காளர்களுக்கான முக்கிய அறிவித்தல்

காலாவதியான அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தியும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகிருப்பினும் தற்போதைய கொரோனா தொற்று  நிலைமையைக் கருத்திற் கொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ள மோட்டார் வாகன திணைக்களம் சலுகைக் காலத்தை வழங்கியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க பிரத்தியேகப் பேனைகளை பயன்படுத்த முடியும் எனவும் அவை நீலம்  அல்லது கறுப்பு பேனையாக இருக்க வேண்டும் எனவும் வாக்காளர் ஒருவர் தனக்கான சொந்தப் பேனாவை கொண்டு வர முடியாவிட்டால் இத்தகைய வாக்காளர்களுக்கு கிருமி கொற்று நீக்கம் செய்யப்பட்ட பேனைகள் வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: