நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்

நாட்டில் நேற்றைய  தினத்தில் 4 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும்,மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும்,துருக்கியில் இருந்து நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2890 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2666 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 213 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: