நுவரெலியா மாவட்ட பிராந்திய தொற்று நோய் பிரிவினரால் பி.சி.ஆர் மாதிரிகள் எடுப்பு

 பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக வெளிபிரதேசங்களுக்கு

சென்று வருகின்ற வாகன சாரதிகளுக்கு பி.சி.ஆர் மாதிரிகள் எடுக்கும்
நடவடிக்கை 25.08.2020 செவ்வாய்கிழமை இன்று பொகவந்தலாவ சுகாதார வைத்திய
அதிகாரியின் காரியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மாதிரிகள் நுவரெலியா மாவட்ட பிராந்திய தொற்று நோய் பிரிவினரினால்
மேற்கொள்ளப்பட்டது.

பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் இந்த பீ. சீ. ஆர். பரீசோதனை மாதிரிகள் எடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பி.சி.ஆர்.பரிசோதனையின் எடுக்கபட்ட மாதிரிகள் அறிக்கை அடுத்த வார அளவில்
வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனசாரதிகள் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்று
வருகின்றமையினை கருத்திற் கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதோடு
இந்த பரீசோதனைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டமை
குறிப்பிடத்தக்கது.No comments: