பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தி


நாட்டில் முதலாவது தாதியர் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஆண்டிலிருந்து தாதியர் பட்டப்படிப்பை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டிலுள்ள 17 தாதியர் கல்லுாரிகளை ஒன்றிணைத்து தாதியர் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர்,பேராசிரியர் ஜனிதா வியனகே குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாதியர் பல்கலைக்கழகத்தின் ஊடாக வருடமொன்றுக்கு 3000 பட்டதாரி தாதியர்களை உருவாக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார அமைச்சின் செயலாளருடன் பல்கலைக்கழக மானியங்கள் இணைந்து புதிய பல்கலைக்கழகத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உபதலைவர்,பேராசிரியர் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: