தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் நாளை வெளியீடு

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் நாளைய தினம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில் குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலற்ற பட்டதாரிகளுக்காக 50,000 தொழில் வாய்ப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளுக்காக பொருத்தமானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: