அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்பு

குமணன் சந்திரன்

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவட்டாய் என்னும் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி அன்று  காணியொன்றில் புதையுண்டிருந்த ரி-81 மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கசெய்யப்பட்டுள்ளது.

இதே வேளை கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23) பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து  விமானப்படையினரினால் யுத்த காலங்களில்  உபயோகிக்கப்பட்ட வெடிபொருள் ஒன்றின் பகுதி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிபொருளை ஆராய்ந்து உரிய அனுமதியை பெற்று செயழிலக்கம் செய்ய பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: