வேலை வாய்ப்பு கிடைக்காத பட்டதாரிகளின் கவனத்திற்கு


விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள்  மேன் முறையீடு செய்தால் அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்வதாரத்தினை உயர்த்தும் வகையில் ஒரு லட்சம்  அரசாங்க வேலை வாய்ப்புக்கள் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பித்திருந்த போதிலும் நியமனங்கள் கிடைக்காதவர்கள் மேன் முறையீடு செய்யும் பட்சத்தில் மீண்டுமொரு சந்தர்ப்பத்தினை வழங்க முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த வேலை வாய்ப்புக்களுக்கு நாடளாவிய ரீதியில் வறுமைப்பட்ட குடும்பங்களில் இருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் உள்வாங்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சுமார் 700 பேரை சிபாரிசு செய்வதன் ஊடாக சரியானவர்களுக்கு குறித்த வேலை வாய்ப்புக்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் அவர்களில் சுமார் 10000 பேர் தெரிவு செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: